Wednesday, October 26, 2011

கனவுகளின் நிறம் காக்கி [சவால் சிறுகதை-2011]

காலை பனியின் குளிர், நடு முதுகை தாக்கியது...
தினமும் வந்தாலும் இன்று வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்தது..
பச்சை புற்கள், பனித்துளிகளின் பாரத்தால் தலை தொங்கி கொண்டிருந்தாலும்.. சூரியன் வரட்டும் என்று காத்து இருந்தது...
நெருஞ்சி செடி மஞ்சள் நிறப் பூ பூத்து, புல்லின் மீது கால் பதிக்க யோசிக்க வைத்தது... 
ஓட்ட பந்தயத்தின் ஓடு பாதையில் இறங்கி மூன்று சுற்று ஓடி வந்து மூச்சு வாங்கி அமர்ந்தான்...
அந்த குளிரிலும் வியர்வை பொங்கி எழுந்து அடங்கியது...
இந்த வியர்வை போதாது என்று மீண்டும் எழுந்து ஓட நினைத்தான்...
அவன் எண்ணத்தை சிதறடித்தது அவனின் அலைபேசி...

"குட் மோர்னிங் சார்"
"_ _ _ _ _ _ _ _ _ _"
"வார்ம் அப் செய்து கிட்டு இருக்கேன் சார்"
"_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _"
"எஸ் சார், இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன் சார்"

உடற்பயிற்சி செய்யும் எண்ணம் காணாமல் போனது...
கடமை அழைத்தது. வீட்டிற்கு சென்று குளித்து முடித்து காக்கி சீருடை அணிந்த பிறகு ஒரு இறுமாப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை, அவனால்... கண்ணாடி முன் நின்றான், உடற்பயிற்சி செய்யும் உடலுக்கு அந்த உடை கன கச்சிதமாய் பொருந்தி அவனை அழகாக காட்டியது. தொப்பியை சரியாக மாட்டினான்.. மீண்டும் கண்ணாடியில் சரி செய்து கொண்டான்.. வெளியே நின்றிருந்த வெள்ளை சுமோவின் மீது ஒட்டி இருந்த போலீஸ் என்ற வாசகத்தை தடவினான்... கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சீருந்தை கிளப்பினான்... காலை ஏழு மணி என்பதால் சாலையில் இல்லாத கூட்டம் அவன் வேகமாய் செல்ல பேருதுவியாய் இருந்தது....

க்ரீச்...
அடித்த ப்ரேக் காவலில் இருந்த காண்ஸ்டபிளை திரும்பி பார்க்க வைத்தது...

"சார், ரெடியாயிட்டாராப்பா?"
"தெரியலப்பா? காலையில் இருந்தே ஒரே பரபரப்பா இருக்கார், என்ன விஷயம்னு தெரியல?"

அவனின் அடுத்த கேள்விக் கணைகள் தேவை அற்றது ஆனது..
வீட்டின் கதவு திறந்தே இருந்தது...

"சார்"
" எஸ், கம் இன்" என்ற கம்பீர குரல் சுவர்களின் மூளை முடுக்கு எல்லாம் பட்டு தெரித்தது..
உள்ளே சென்றேன்.

அவரின் உணவு மேஜை மீது ஒரு காகிதம் பறக்காமல் இருக்க அளவு கோளை தூக்கி வைத்தார்..
மடிக்கப் பட்டிருந்த காகித துண்டுகளை பிரித்து நேராக்கினார்...

ஒன்றில் 
சார்,
எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன் 
கவலை வேண்டாம்.
-விஷ்ணு 

மற்றொன்றில் 
Mr . கோகுல் 
S W H2 6F - இது தான் குறியீடு. கவ....
-விஷ்ணு 

அந்த நேரத்தில் அவர் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது...
விஷ்ணு இன்போர்மேர் என்று திரையில் தெரிந்தது...

"எஸ்"
"_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _"
"ஓகே. நான் பார்த்துக் கொள்கிறேன்"
என்று கூறி விட்டு அலைபேசியை முடக்கினார்...

சார்....
"என்ன சார் இது"
"அது உனக்கு தேவை இல்லாத விஷயம், பசங்க இன்னிக்கு ஸ்கூலுக்கு சீக்கிரம் போகணுமாம்.. அதான் உன்னை சீக்கிரம் வரச்  சொன்னேன்.. போய் அவங்க ரெடி ஆகிட்டாங்கலான்னு பாரு"

எஸ்.பி சாரின் ஆறாம் வகுப்பு படிக்கும் பெரிய பையன் ஓடி வந்தான்,

"டிரைவர் அங்கிள், இன்னிக்கு நான் தான் முன்னாடி உக்காருவேன்"

19 comments:

RAMVI said...

உங்களோட இந்த பக்கத்ட்தை நான் இதுவரை பார்த்ததில்லை சூர்யஜீவா. ரொம்ப நல்லாயிருக்கு.

உங்க சவால் போட்டிக்கான கதை அருமையாக இருக்கு.கடைசியில் அழகான திருப்பத்தோட..வாழ்த்துக்கள்.

Anonymous said...

கனவுகளின் நிறம் காக்கி...Stand At Ease..

ஜெயிக்காமல் விட மாட்டீங்க போல...
வெற்றி பெற என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்...

வலிபோக்கன் said...

வாழ்த்துக்கள்,காக்கி என்றவுடன் வேறு ஒரு காக்கியை நினைத்தேன்

கிருபாநந்தினி said...

ராஜியின் வலைச்சரம் பிளாகில் நீங்க போட்டிருந்த அக்கறையான விசாரிப்பைப் படிச்சு இங்கே வந்திருக்கேங்ணா! தீபாவளி வாழ்த்துக்கள்! உடம்பை விட, என் பதிவுகளுக்கு வந்த பிரசுரிக்க இயலாத ரொம்பக் கடுமையான, கேவலமான பின்னூட்டங்களால் மனசுதாங்ணா ரொம்பவே பாதிச்சிருக்கு. அதனாலதான் பதிவு எழுதறதையே நிறுத்திட்டேன். உங்களை மாதிரி அன்புள்ளங்களுக்காகத்தான் மற்ற வலைப்பூக்களைத் தொடர்ந்து படிச்சு, பின்னூட்டம் போட்டுக்கிட்டு வரேன். நன்றிங்ணா!

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்..

veedu said...

அண்ணா கதை சின்னதா இருந்தாலும் நல்லாயிருக்கு குமுதம் ஒரு பக்க கதை மாதிரி
வெற்றி பெற வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

சிறியதாக,சிறப்பாக!

ராக்கெட் ராஜா said...

கிளைமாக்ஸ் சூப்பர் எதிர்ப்பாக்கல நல்ல இருக்கு வாழ்த்துக்கள் நண்பரே

ராக்கெட் ராஜா said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையல

Ramani said...

வித்தியாசமான சிந்தனை
கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை என்பது மாதிரி
ஒரு பக்கக் கதை ஆயினும் அருமையான படைப்பு
வெற்றி பெற வாழ்த்துக்கள்

போளூர் தயாநிதி said...

மாறுபட்ட சிந்தனை நல்ல படைப்பு பாராட்டுகள்

அம்பாளடியாள் said...

சிறுகதை இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம் அருமை!..வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி
பகிர்வுக்கு .......

விச்சு said...

நல்லாயிருக்கு நண்பரே... நீங்கள் வேற மாதிரி கூட கொஞ்சம் யோசித்திருக்கலாம் என்பது என் எண்ணம். வாழ்த்துக்கள். உடான்ஸ்ல என்னுடைய வோட்டும் பதிஞ்சாச்சு.

middleclassmadhavi said...

நல்ல முயற்சி நண்பரே! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

suryajeeva said...

மறுமொழி கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

சும்மா தமாசுக்கு தான் போட்டிக்கு கதை எழுதினேன்..

நம்பிக்கைபாண்டியன் said...

நல்லாருக்கு,அநேகமாக இதுதான் மிகச்சிறிய கதையாக் இருக்கும் என்று நினைக்கிறேன்.

jayaram thinagarapandian said...

கதை அருமை ...
வெற்றிபெற வாழ்த்துக்கள்..

suryajeeva said...

பின்னூட்டம் இட்ட அணைத்த தோழர்களுக்கும் நன்றி

bigilu said...

என்ன ஒரு வில்லத்தனம்..... :)

Post a Comment