Friday, October 28, 2011

கதை விடலாமா?[சவால் சிறுகதை -2011]

Sir,
எஸ்.பி.கோகுலிடம் தவறான
குறியீட்டைத் தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்.
-விஷ்ணு

இப்படி ஒரு காகிதம் எட்டாக மடித்து இருந்தது.

Mr . கோகுல்_
இது தான் குறியீடு. கவ
-விஷ்ணு

இப்படி ஒரு காகிதம் நான்காக மடித்து இருந்தது.
இந்த காகிதத்தை பிடித்து இருந்த விரல்கள் சரியாக அந்த கடைசி வார்த்தை மேல் இருந்தது, என் ஆர்வத்தை தூண்டியது.

கவ.. அப்படின்னு, என்ன வார்த்தைகள் தமிழ்ல தொடங்குது என்று யோசித்தேன்..
எடுரா அந்த தமிழ் லெக்சிகன என்று கூறியபடி அந்த பெரிய புக்க தூசி தட்டி எடுத்தேன். நமக்கு இருக்கிற சைனஸ் பிரச்சினை தூசுக்கு தெரியுமா? அடுக்கு தும்மல் வர ஆரம்பிச்சுடிச்சு.. ஒரு வழியா தும்மல் நின்னு கவ தேடினால்...

கவசம், கவட்டி, கவட்டை, கவிடம், கவடி, கவடு, கவண், கவண்டி, கவனம், கவனி, கவணை, கவந்தம், கவந்தன், கவந்தி, கவம், கவயம், கவயமா, கவல், கவர்தல், கவர்ச்சி, கவர்த்தடி, கவர்ப்பு, கவர்பு, கவர்வழி,. கவர்வு, கவரம், கவரி, கவரிமான், காவல், கவல்பு, கவலம், கவலை, கவவு, கவழம், கவளம், கவளி, கவற்சி, கவற்றி, கவறல், கவறு, கவறை, கவனம், கவனி...

ஸ்ஸ்ஸ்.. அப்பாடா, இத்தனை வார்த்தைகளா... என்னடா உனக்கு வந்த சோதனை என்று கூறி விட்டு 'கவனம்' மட்டும் பொருந்துவது போல் இருந்தது. 'கவலை வேண்டாம்' என்பது அந்த காகிதத்தின் அளவை விட பெரிதாக இருக்கும் என்பதால் அது சரியில்லை என்று தோன்றியது...

சரி, கவனம் என்றே இருக்கட்டும்... என்று அடுத்து S W H2 6F வந்தேன்.
என்ன கன்றாவிடா இது? என்று மட்டும் தோன்றியது.
S - SOUTH
W - WEST
H2 - 6F எல்லாம் மேப்களில் வரும் குறியீடு போல் தோன்றியது... பத்தாவது புவியியல் படிக்கும் பொழுது தொட்ட அட்லஸ் புக்கை மீண்டும் தொட வைச்சுட்டாங்களே, என்ற ஆதங்கத்துடன்... இன் 1996 அப்படின்னு ஆரம்பிச்சா நல்லா இருக்குமா? என்ற யோசனை தோன்றியது.. அடிச்சே கொன்னுடுவாங்க மக்க என்று அலறியது மனசு...

அட்லஸ் எடுத்து பிரித்த உடன் தான், டேய் நீ பெரிய ட்யூப் லைட் டா என்று கூறியது மனசு... எந்த பக்கத்தோட H2, எந்த பக்கத்தோட 6F என்று குழம்பி அப்புறம் SW ஆரம்பிக்கிற ஊர் பேரை எல்லாம் பார்த்து கொண்டே வந்ததில தூக்கம் தான் வந்துச்சு... லோக்கல் ஊர் பேர் இந்த S W ல வரவே வராதோ?

சரி விட்ரா, கூகிளில் தேடி பார்த்திடுவோம், என்று கணினியை நாடினேன்.
கூகிளில் S W H2 6F என்று தட்டியவுடன் சுமார் 3,32,000 பக்கத்துடன் தொடங்கி, இன்னும் எண்ணிக் கொண்டே இருக்கிறேன் என்று மிரட்டியது.. அதில் முதல் பக்கத்தில் என் கவனத்தை கவர்ந்தது...  AIRLINE CODE என்ற வலை தளம் தான்.. ஆஹா கிடைச்சுடுச்சு என்று சந்தோஷத்தில் உள்ளே நுழைந்தால் அது உலகத்தில் இருந்த இருக்கின்ற அனைத்து விமான நிறுவனங்களின் கோட் நம்பர்களை தாங்கி இருந்தது...
CTRL+F தட்டி மூலையில் திறந்த பெட்டிக்குள் SW என்று தட்டினேன்.
AIR NAMIBIA என்று காட்டியது
H2 என்று தட்டினேன்
CITY BIRD AIRLINES என்று காட்டியது
6F என்று தட்டினேன்
LAKER AIRWAYS என்று காட்டியது.

சரி சிட்டி பேர்ட் ஏர்லைன்ஸ் பற்றி பார்ப்போம் என்று கூகிளில் தேடினால் அது திவாலாகி விட்டது என்றும் இப்பொழுது சரக்கு விமான சேவை செய்து வருவதாகவும் கூறியது.
லேகர் ஏர்வேஸ் என்று கூகிளை தேடினால் அது திவாலாகி ஆண்டு கணக்காய் ஆகி விட்டது என்று கூறியது...

சரியா போச்சு.... என்று யோசித்து கொண்டே படுக்கையில் படுத்தேன்... இது மின்னஞ்சல் முகவரிக்கான குறியீட்டு  எண்ணும் கிடையாது என்பது ஒவ்வொரு எழுத்துக்கும் நடுவில் உள்ள காலி இடங்கள் தெரிவித்தது... அப்படியே யோசித்துக் கொண்டே இருந்ததில் எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை..

S W என்றால் சப் வே என்று அலறியபடி எழுந்து உட்கார்ந்தேன்...
நல்ல வேளை வீட்டில் அனைவரும் தீபாவளிக்கு ஊருக்கு போயிருந்ததால் தப்பித்தேன்... இல்லை என்றால் அக்கம் பக்கத்தில் எல்லாம் கூறி மானத்தை  எடுத்திருப்பாள்..
எந்த ஹைவேஸில் உள்ள சப் வே என்று தேடினால் ஓரளவுக்கு க்ளு கிடைச்சுடும் என்று மீண்டும் தூங்கி போனேன்.

கனவுகளில் யாரோ முனிசிபாலிட்டி தண்ணீரில்[h2] ப்ளுரினை[6f] கலந்து விடுவது போலவும் அதை தடுக்க என்னை அழைக்கவும், நான் ரஜினி படத்தில் வருவது போல கருப்பு ஜெர்கின் போட்டு, பாம்களை தொங்க விட்டு, கையில் மெஷின் கண் எடுத்து கொண்டு திரும்பவதற்கும், பின்னணி இசை கிளம்புவதற்கும், பால்காரன் மணி அடிக்கவும் சரியாக இருந்தது..

பாலில் தண்ணீர், தண்ணீரில் ப்ளுரின் என்று பினாத்திக் கொண்டே தூக்கத்தை முகம் கழுவி துரத்தி அடித்தேன்.

கணினியை உயிர்பித்தேன்... டெஸ்க் டாப்பில் அந்த படம் அருமையாக முறைத்தது. அலைபேசி திரையில் தெரியும் விஷ்ணு இன்போர்மேர் யாரு? விஷ்ணு கால் செய்வது போல் தான் உள்ளது... இங்கே அலைபேசியை கையில் வைத்திருப்பவர் முடிவெட்டை பார்த்தால் அவர் போலீஸ் இல்லை என்று தோன்றியது.. காகிதங்கள் மடிக்கப்  பட்டு பிரித்து இருந்ததால் மேஜை மீது இருக்கும் அளவு கோல், காகிதத்தை கிழிக்க பயன் படவில்லை என்று தோன்றியது... அதிலும் ஒரு காகிதம் சின்ன சைஸ், மற்றொன்று பெரிய சைஸ்...

அட போங்கப்பா..
சவாலாம்...
சிறுகதையாம்...

இந்த ஆட்டம் நல்லா இருக்கு, ஆனால் நான் இந்த ஆட்டத்துக்கு வரல...

பி.கு. என் நண்பர் ஒருவர், மச்சான் நீ இதையே ஒரு கதையா எழுதி  போடு... ப்ராக்சி ஐ.பி. சர்வர் தரும் வலை தளங்கள் பல இருக்கிறது... அது மூலமா உன் கதைக்கு நூறு ஓட்டு நான் போடுறேன் என்றான்... நீங்களே சொல்லுங்க இதெல்லாம் ஆவுற கதையா?

20 comments:

veedu said...

ஆஹா ஆரம்பிச்சிட்டிங்க பட்டையக்கிளப்புங்க

udanz - 1

ராக்கெட் ராஜா said...

பார்ட்-2வா பட்டய கிளப்புங்க

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அருமை அண்ணே கதை சூப்பர்

Mohamed Faaique said...

உங்க 2 கதையுமே வித்தியாசமா இருக்கு...

இராஜராஜேஸ்வரி said...

udanz udanz

ரெவெரி said...

பி.கு. என் நண்பர் ஒருவர், மச்சான் நீ இதையே ஒரு கதையா எழுதி போடு... ப்ராக்சி ஐ.பி. சர்வர் தரும் வலை தளங்கள் பல இருக்கிறது... அது மூலமா உன் கதைக்கு நூறு ஓட்டு நான் போடுறேன் என்றான்... நீங்களே சொல்லுங்க இதெல்லாம் ஆவுற கதையா?

ஆவுற கதை தான் தோழரே ...

கோகுல் அடுத்த கதையிலும் வருவாரா?

பிடித்தது.

ஆமினா said...

செமையா கதைய கொண்டு போயிட்டு அப்படியே ட்ராக்க மாத்டுபுட்டீகளே......

வாழ்த்துக்கள்

வலிபோக்கன் said...

இதெல்லாம் ஆவுற கதையா? ஆகுற கதையா மாத்துவோமுங்க!!

ஸ்ரீராம். said...

//ஆவற கதையா....//

ஆயிடுச்சே...!

நம்பிக்கைபாண்டியன் said...

சொந்த கதையும் ஓரளவுக்கு பொருந்துவது போல் எழுதி இருக்கிறீர்கள். குறீயிடுக்கு சொன்ன விளக்கம் நன்று.

asiya omar said...

இதுவும் நல்லாயிருக்கே!

பரமசிவம் said...

தொடர்ந்து படிக்கத் தூண்டும் விறுவிறுப்பான நடை.
இன்னும் எழுதுங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா வில்லத்தனம்.......? (சரி சரி எனக்கு ஒரு 50 ஓட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்கண்ணே.....)

வெளங்காதவன் said...

ஹி ஹி ஹி....

சிவகுமாரன் said...

கதை அவ்வளவு தானா ? என்ன பாஸ் ?

வெண் புரவி said...

ஐயோ..ஐயோ...

suryajeeva said...

மறுமொழி இட்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி

நிரூபன் said...

பாஸ்..
இந்தக் கதையும் சூப்பர்,
சவாலுக்கே நீங்க சவால் விட்டிருக்கிறீங்க.
ரசித்தேன்,.

jayaram thinagarapandian said...

கதை சூப்பர் அப்பு

bigilu said...

வாழ்த்துக்கள்... இப்படி கூட கதை எழுத முடியுமா பாஸ்... நல்ல சிந்தனை... சூப்பரு...

Post a Comment