Monday, October 31, 2011

ஐ.டி [சவால் சிறுகதை -2011]

எவரும் எளிதில் ஊடுருவ முடியாத, வலைபின்னல் கொண்ட அமைப்பு இது.
ஒரு செய்தியை தலைமைக்கு தெரிவிக்க அநேகமாக இரண்டு அல்லது மூன்று நபர்களிடம் கொடுப்பது இவர்கள் வாடிக்கை.. தகவல் தொழில் நுட்ப துறையின் பொறியியல் படிப்பு படித்தவர்கள், பெரும்பான்மை அங்கம் வகிக்கும் அமைப்பு. 

வலை தளம் தான் இவர்கள் உலகம். தகவல் சேகரிப்பவர்கள் முக்கால் வாசி நபர்கள் ஹக்கர்ஸ். சிறு இனைய தள மையங்கள் இவர்களின் தகவல் மையங்கள். யூசெர் அக்கௌன்ட் இல்லாத கணினிகள் தான் இவர்களின் விருப்பம். அங்கு ஐ.பி. ப்ராக்சி தரும் வலை தளங்கள் மூலமாக, பதினோரு நிமிடங்களுக்கு ஒரு முறை விதம் விதமான ஐ.பி முகவரிகளில் வலம் வருவார்கள். 

மொபைல் க்ளோனிங் இவர்களுக்கு அத்துப்படி...
இவர்களிடம் இருக்கும் அனைத்து அலைபேசி எண்களும் முக்கியமான காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களாக இருக்கும். பெரும்பாலும் இந்த எண்கள் அனைத்தே வைக்கப் பட்டிருக்கும். முக்கியமான தொடர்புக்கு மட்டுமே இந்த எண்களை பயன் படுத்துவார்கள்.

அனைவரிடமும் வீடியோ அழைப்பை கொடுக்கும் வசதி உள்ள, அலைபெசிகளே வைத்திருப்பார். அழைக்கும் பொழுது இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள், மாறாக மாற்றுத் திறனாளிகளின் சைகை மொழிகள் மூலமாகவே தகவல்களை பரிமாறிக் கொள்வர்.

மேஜை மீது இரண்டு துண்டு சீட்டுகளும் பிரித்து வைக்கப் பட்டிருந்தது... தகவல் கிடைத்தவுடன் மடித்து கல் சட்டை வார் பட்டை கீழ் ஒளித்து எடுத்து வந்ததால் மடிப்பு கலைக்க முடியாமல் கிடந்தது.

Sir,
எஸ்.பி.கோகுலிடம் தவறான
குறியீட்டைத் தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்.
-விஷ்ணு

இப்படி ஒரு காகிதம் எட்டாக மடித்து இருந்தது.

Mr . கோகுல்_
S W H2 6F. இது தான் குறியீடு. கவனம்.
-விஷ்ணு

இப்படி ஒரு காகிதம் நான்காக மடித்து இருந்தது.

அந்த மேஜையை சுற்றி நான்கு நபர்கள் உட்கார்ந்து இருந்தனர்... ஒருவருக்கும் புரியவில்லை... தவறான குறியீடு என்றும் கொடுத்து விட்டதால் கையில் அலைபேசியுடன் காத்திருந்தனர்.. 

"விஷ்ணு அழைத்து சொனால் தான் நமக்கு புரியும். அது வரை காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை," என்றான் ஒருவன்.

சொல்லி முடிப்பதற்கும் அழைப்பு வருவதற்கும் சரியாக இருந்தது. ஒரு துளி சத்தம் கூட எழவில்லை என்று உறுதி படுத்தி கொண்டபின் அழைப்பை ஏற்றார் நால்வரில் ஒருவன்..

குறியீட்டுக்கான விளக்கத்தை சைகை மொழியில் மொழி பெயர்த்து அழைப்பு துண்டிக்கப் பட்டது..
Short Wave Hz 6000 Frequency என்று மற்றவர்களிடம் குறியீட்டை மொழி பெயர்த்து சொன்னான் அழைப்பை ஏற்றவன்.

அனைவரும் ரேடியோவை உயிர்ப்பித்தார்கள். விஷ்ணு கூறிய ப்ரீகுயன்சியில் ட்யூன் செய்தார்கள். விஷ்ணு தொடர்புக்கு வந்தான்.

"ஓவர், ஓவர்"

"என்ன விஷ்ணு, திடீர்னு இந்த லைன்ல, ஓவர்"

"மிகப் பெரிய சதி திட்டம் தோழர், அதான் நேரடியா கூறினா தான் தடுக்க முடியும், உங்கள் அலைபேசிகளையும் காவல் துறை கண் காணித்து வருகிறது என்ற சந்தேகம். அதான் வேறு வழி இல்லாமல் இந்த ஷார்ட் வேவ் ரேடியோ, இதை காவல் துறை மோப்பம் பிடிப்பது கடினம். ஓவர்"

"அதான் தெரியுமே. என்ன விஷயம் சொல்லுங்க? ஓவர்"

"ஆளும் கட்சி, எதிர் கட்சி தலைவரை கொல்ல திட்டம் போட்டு இருக்காங்க... கொன்று விட்டு நம் நாட்டில் உலவும் ஏதாவதொரு நக்சல் இயக்கம் மீது பழியை போட திட்டம் போட்டு இருக்காங்க. ஓவர்."

"எங்க, எப்படி என்ற தகவல் இருக்கா? ஓவர்."

"இருக்கு தோழர். மதுரையில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில திருமங்கலம் பக்கத்தில ஆலம்பட்டி கிராமத்து ரோட்டுல இருக்கிற பாலத்துக்கு கீழ பைப் வெடிகுண்டு வைக்க போறதாக தகவல், வெடி குண்டுக்கு போற மின்சார கம்பிகளை யார் கண்ணுக்கும் தெரியாமல் புதைத்து வைக்க சொல்லி ஏற்பாடு. ஓவர்."

"சரிங்க தோழர். இனிமேல் நாங்க பார்த்துக்கிறோம். நன்றி தோழர்"

அடுத்த நாள் செய்தியில், ஒரு கிராமத்து ஆள் அந்த பக்கமாய் சென்ற பொழுது மின்சார கம்பிகளை பாலத்துக்கு பக்கத்தில் பார்த்து உஷாராகி காவல் துறைக்கு தகவல் கொடுத்ததாக பேசிக் கொண்டிருந்தார்.. ஆளும் கட்சியோ புதைத்த மின்சார கம்பிகள் எப்படி பூமிக்கு வெளியே வந்தது என்று புலம்பி கொண்டிருந்தனர்.

20 comments:

வெளங்காதவன் said...

ரைட்டு,.....

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

சூப்பர் அண்ணே

ராஜா MVS said...

முயற்சி அருமை... நண்பா...

Anonymous said...

நல்லா எழுதி இருக்கீங்க தோழரே....தொடக்கம் தேவை தானா என்ற கேள்வி மட்டும் மனதில் ....

சத்ரியன் said...

ஒரே தலைப்புக்கு இப்படி விதவிதமா கதைவிடலாமா சூர்யஜீவா சார்?

கதை அருமை.

மழை said...

அனைவரிடமும் வீடியோ அழைப்பை கொடுக்கும் வசதி உள்ள, அலைபெசிகளே வைத்திருப்பார். அழைக்கும் பொழுது இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள், மாறாக மாற்றுத் திறனாளிகளின் சைகை மொழிகள் மூலமாகவே தகவல்களை பரிமாறிக் கொள்வர்.///

பைப் வெடிகுண்டு///

இரண்டும் புதுமையா இருக்கு..!!!

வெற்றிபெற வாழ்த்துக்கள்:)

வெண் புரவி said...

நல்ல இருக்கு....வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

Mohamed Faaique said...

உங்க கதைகளிலேயே இது 1ஸ்ட் க்லாஸ்’ஆ இருக்கு...

suryajeeva said...

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நலமா?
தீபாவளி கொண்டாட்டங்கள் எப்படி?
வித்தியாசமான முறையில்
தொழில் நுட்பம், திரிலிங் கலந்து ஒரு கதையினைப் படைத்திருக்கிறீங்க.

வாழ்த்துக்கள் தல.
கதை நல்லாயிருக்கு.

அம்பாளடியாள் said...

கதை அருமை வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ......

Ramani said...

அருமையாக கதை சொல்லிப்போகிறீர்கள்
வெற்றி பெற வாழ்த்துக்க

மாலதி said...

கதை சொல்லுகிற விதம் சிறப்பாக இருக்கிறது பாராட்டுகள் நன்றி

raji said...

கொடுத்த குறிப்பை வச்சு, வளவளக்காம 'நறுக்" குன்னு அழகா எழுதிட்டீங்க.

(உங்க பதிவுகள் எல்லாம் படிச்சேன்.ஒரு வாரமா உங்க பதிவுகளுக்கு கமென்ட் போட ட்ரை பண்ணியும் அது பப்ளிஷ் ஆகாம சைன் அவுட் கொடுத்துட்டு போடச் சொல்லி தொந்தரவா இருந்துச்சு.என்ன பிரச்சனைனு தெரியலை.ஒரு வழியா இன்னிக்கு போட்டுட்டேன்)

raji said...

யுடான்ஸ் ஓட்டு பத்து :)

இராஜராஜேஸ்வரி said...

"ஓவர், ஓவர்"

வெற்றி பெற வாழ்த்துக்கள்

veedu said...

கதை அருமை சுருக்கமா இருக்கறதால படிக்க நல்லாயிருக்கு...

UDANZ-11

jayaram thinagarapandian said...

கதை அருமை..
indian politics jai...:P

சேக்காளி said...

வணக்கம் தோழரே
கதையில் வேறோரு கோணத்தை காட்டியிருந்தீர்கள்.குறிப்பாக பெரும்பாலோர் காவல் துறையின் கண்ணோட்டத்தில் சிந்தித்துக் கொண்டிருக்க உங்கள் கதை தோழர்கள் பின்புலத்தில் சொல்லப் பட்டுள்ளது. அடுத்து மக்களை காக்க வேண்டிய ஆளும் கட்சி மற்றவர்களை அழிக்கும் மனோபாவத்தில் இருப்பது மற்றும் தீவிரவாதிகள் என்று அவர்களால்(அரசு மற்றும் ஆளும் கட்சி) காட்சி படுத்தப் படும் தோழர்கள் உயிரை(உயிர்களை) காப்பாற்றுவது.நன்றாகவே வந்துள்ளது ஐ.டி

middleclassmadhavi said...

உங்கள் மூன்றாம் கதை முதல் இரு கதைகளை விட அருமையாயிருக்கிறதே! வாழ்த்துக்கள்!

Post a Comment