Sunday, October 9, 2011

கொடுக்க நினைப்பவன்

கடனா கொடுத்த பணத்தை ஆறு மாதமாகியும் திருப்பி கேக்கவே இல்லையே... மனம் உறுத்த நான் சுப்பிரமணி சார் வீடு நோக்கி நடந்தேன். வாசலை அடையும் பொழுது என் பெயர் அடிபட்டது..

"ஏங்க, சம்பளம் வரலேன்னு, பாபுவுக்கு பணம் கொடுத்தீங்களே, எப்ப திருப்பி தருவாராம்?"

"கொடுப்பான்மா! அவன் கிட்ட பணம் வந்தா உடனே கொடுத்திடுவான்."

"நீங்க கேட்டீங்களா?"

"எதுக்கு கேக்கணும்?"

"அப்ப தானே கொடுப்பார்."

"ஒன்னு புரிஞ்சுக்கம்மா. கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறவன், எவ்வளவு கேட்டாலும் கொடுக்க மாட்டான். கொடுக்கணும்னு நினைக்கிறவன், தினம் அதையே நினைச்சு தவியா தவிப்பான்... இரண்டு பேர் கிட்டயும் கேக்கிறது அனாவசியம். ஆனா பாபு இருக்கானே அவன் இரண்டாவது ரகம்."

என் மனம் அவர் காலை தேடியது....

2 comments:

குடந்தை அன்புமணி said...

இரண்டு ரகம் இருக்கிறார்கள் உண்மைதான். என்ன பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது...

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை....

Post a Comment