Sunday, November 13, 2011

குழந்தைகள் உலகம் மகத்தானது

சாகம்பரி மேடம் 
 ரசிகன் தோழரும்
என்னை தொடர் பதிவு எழுத அழைத்தார்கள்..
நான் யாரையும் அழைக்கப் போவதில்லை..
தோழமைக்கு மரியாதை செலுத்த என் பிள்ளைகளுக்கு நான் சொல்லும் கதையை இங்கு சொல்கிறேன்..

தன்னம்பிக்கை மட்டுமே, நம் வாழ்வில் வழிநடத்தும்.
பழைய நம்பிக்கைகளை மீள் கல்வி மூலம் அறிந்து கொள்ளா விடில் சிக்கலே.
நான் படித்த காலத்தில் ஒன்பது கிரகங்கள், இன்று எட்டு தான் என்று படித்துக் கொண்டிருக்கிறார்கள்..
இல்லை நான் படித்தது ஒன்பது ஆகையால், ஒன்பது தான் என்று பழைய நம்பிக்கைகளை சந்தேகப் படாமல் பகுத்தறிவு வளராது..

அதே போல் வெற்றி என்பது கொண்ட கொள்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை விடாப் பிடியாய் கடைப் பிடிப்பதில் உள்ளது.. கொள்கையை விட்டுக் கொடுத்தால் அது வெற்றி அல்ல என்பது என் எண்ணம்...

இனி ஒரு சிறுவர் கதை...

ஒரு வேப்ப மரத்தில ஒரு காக்கா குடும்பம் வாழ்ந்து வந்துச்சாம்...

அம்மா காக்கா
அப்பா காக்கா
அக்கா காக்கா
தம்பி காக்கா

அக்கா காக்காவும், தம்பி காக்காவும் ரொம்ப சின்ன பசங்கன்றதால கூட்டுலே உக்காந்து இருக்குமாம்..

அம்மா காக்காவும், அப்பா காக்காவும் வேலைக்கு போய் சாப்பாடு வாங்கி வருமாம்.

ஒரு நாள் அக்கா சும்மா உக்கார புடிக்காம, அம்மா மாதிரியே ரெக்கையை அடிச்சி அடிச்சி பாக்க, அதுக்கு பறக்க வந்துடுச்சாம்... ஒழுங்கா எப்படி பறக்கிறதுன்னு தெரியாததால கீழே விழுந்துடுச்சாம்... அப்புறம் அப்பா வந்து உதவி செஞ்சு திரும்பவும் கூண்டுக்குள்ள வந்துச்சாம் அக்கா...
அடுத்த நாள் தம்பி ஒரு ஐடியா சொன்னான்.. அக்கா ரொம்ப பறக்காம கிளைக்கு கிளை பறந்து பாக்கலாம் அப்படின்னான்...

சரி அப்படின்னு சொல்லிட்டு அக்காவும் தம்பியும் பறக்க கத்துகிட்டாங்க.
அடுத்த நாள் அப்பாவும் அம்மாவும் உக்காந்து அக்காவையும் தம்பியையும் பாத்து, நீங்க பறக்க ஆரம்பிச்சிட்டீங்க. அதனால் ஒரு விஷயம் சொல்லணும், அப்படின்னாங்க. தம்பியும் அக்காவும் ஆர்வமாய் என்ன என்ன அப்படின்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க.

அதாவது, இங்கிருந்து வடக்கு பக்கம் ஒரு வயல் இருக்கும் அங்க சாமி சிலை இருக்கும், அவர் மேல உக்கார கூடாது. சாமி கண்ணை குத்திடும் அப்படின்னு சொன்னாங்க. அவர் வெள்ளை கலர் டிரஸ் போட்டிருப்பார் அப்படின்னும் சொன்னாங்க

இங்கிருந்து தெக்கால ஒரு வயல் இருக்கும் அங்க ஒரு பேய் இருக்கும், அது கிட்ட கூட போக கூடாது. போனா வந்தி பேதி எல்லாம் வரும் அப்படின்னு சொன்னாங்க. அந்த பேய் கருப்பு டிரஸ் போட்டிருக்கும் அப்படின்னும் சொன்னாங்க.

அடுத்த நாள் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போன உடன, அக்காவுக்கும் தம்பிக்கும் ஆர்வம் தாங்கல. அவங்க ரெண்டு பெரும் போய் சாமியையும் பேயையும் பாத்துட்டு வரதுன்னு முடிவு செஞ்சாங்க. அக்கா சாமிய பாக்க கிளம்பி போனாங்க. தம்பி பேயை பாக்க போனான்.

ரெண்டு பெரும் திரும்ப வந்து, அவங்க தூரத்தில் இருந்து சாமியை பாத்த கதையையும், பேயை பாத்த கதையையும் பேசிகிட்டாங்க. அன்னிக்கு ராத்திரி அவங்க அப்பா அம்மா கிட்டயும் சொன்னாங்க...

அவங்க ரெண்டு பேரும் உண்மைய சொன்னாலும் பேச்சை மீறி நடந்தது  அவங்க அப்பா அம்மாவுக்கு பிடிக்கல, அதனால மண்டையில நாலு குத்து வாங்கினது தான் மிச்சம்..

தம்பிக்கும் அக்காவுக்கும் கோவம் வந்திடுச்சி...
அதை வெளிய காட்டிக்காம அடுத்த நாள்
தம்பி சாமிய பக்கப் போனான்
அக்கா பேயை பாக்க போனாங்க...

அப்பா அம்மா மேல இருந்த கோபத்தில அக்கா பேய் மேலேயும், தம்பி சாமி மேலேயும் உக்கந்துச்சுங்க.. உக்காந்து கொத்தி பாத்துச்சுங்க.. அப்புறம் தான் அதுங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சுச்சு...

அந்த சோள கொல்ல பொம்மை எதுவும் பண்ணாம கம்முன்னு நிக்கும் நு..


16 comments:

Anonymous said...

குழந்தைகள் உலகம் மகத்தானது... சிறுவர் கதையும்...தோழரே..

சாகம்பரி said...

நன்றி தோழர். குழந்தை கதையிலேயே பகுத்தறிவை புகட்டி...., இதற்காகவே தொடர் பதிவில் உங்களையும் அழைத்தேன். பகிர்விற்கு மிக்க நன்றி.

சம்பத் குமார் said...

//வெற்றி என்பது கொண்ட கொள்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை விடாப் பிடியாய் கடைப் பிடிப்பதில் உள்ளது.. கொள்கையை விட்டுக் கொடுத்தால் அது வெற்றி அல்ல என்பது என் எண்ணம்... //

என்னைக்கவர்ந்த வரிகள்

குழந்தைகள் உலகம் மகத்தானதுதான்..

கதையின் கரு அருமை..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...

Mohamed Faaique said...

சின்ன பசங்க கதைனாலும், பெரியவங்களுக்கும் புத்திமதி இருக்கு...
பகிர்வுக்கு நன்றி

சீனுவாசன்.கு said...

உங்க மண்டையில என்னா மூளை!ஒரு கொட்டு வைக்கனும் போல இருக்கு!இல்ல இல்ல குத்து வைக்கனும் போல இருக்கு!!

ரசிகன் said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

//இல்லை நான் படித்தது ஒன்பது ஆகையால், ஒன்பது தான் என்று பழைய நம்பிக்கைகளை சந்தேகப் படாமல் பகுத்தறிவு வளராது..//

எனக்கு இந்த இடம் புரியவில்லை.

கதை வழி பகுத்தறிவை புகுத்துகிறீர்கள். உங்கள் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். வாழ்த்துக்கள்.

jayaram thinagarapandian said...

உண்மை தான்
நாம் வளர்ந்த பிறகும்
நாம் சிறு பிள்ளைகளை
போல் நம் பெற்றோர்களால் நடத்தபடுவது
வேதனைதான்

Lakshmi said...

ஒருகாக்கா கதை சொல்லி நிதரிசனம் புரியவச்சுட்டீங்க. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

ரசிகன் said...

நான் படித்த காலத்தில் ஒன்பது கிரகங்கள், இன்று எட்டு தான் என்று படித்துக் கொண்டிருக்கிறார்கள்..
இல்லை நான் படித்தது ஒன்பது ஆகையால், ஒன்பது தான் என்று பழைய நம்பிக்கைகளையே நம்பிக் கொண்டிருந்தால் பகுத்தறிவு வளராது.

அல்லது

நான் படித்த காலத்தில் ஒன்பது கிரகங்கள், இன்று எட்டு தான் என்று படித்துக் கொண்டிருக்கிறார்கள்..
நான் படித்தது ஒன்பது ஆயிற்றே, எட்டு தான் என்பது சாத்தியமா? என்று பழைய நம்பிக்கைகளை சந்தேகப் படாமல் பகுத்தறிவு வளராது.

என இருந்திருக்கலாம். உங்கள் வார்த்தைகள் இடறியதால் புரியவில்லை என்றேன். விளக்கியதற்கு நன்றி.

Avargal Unmaigal said...

கதை மிகவும் அருமை இது போல நிறைய கதைகளை அடிக்கடி சொல்லுங்களேன் எனது குழந்தைக்கு கதை சொல்ல இன்று ஒரு நல்ல கதை கிடைத்து விட்டது நன்றிகள் தோழர் ஜீவா

Avargal Unmaigal said...

//தன வீட்டு அடுப்பு எரிய
அவள் எரிந்தாள்,
சிகப்பு விளக்காக...///

குறுங்கவிதை அருமை படிக்கும் போது மனம் நெருப்பாக சுடுகிறது நண்பரே

suryajeeva said...

மதுரை தமிழரே,
உங்கள் அளவுக்கு நகைச்சுவை கதை எனக்கு தெரியாது...
என் மனைவி ஆத்திகவாதி, நான் நாத்திகவாதி.. அதனால் இந்த கதை அவருக்கும் சேர்த்து சொல்லப் பட்ட கதை...
நமக்கு கற்பனை கதை வராது சார், உண்மை சம்பவங்களை கோர்த்து கதை எழுத சொன்னா விளையாடுவேன்.. அவ்வளவு தான்

Kanchana Radhakrishnan said...

கதையின் கரு அருமை.
பகிர்வுக்கு நன்றி

அப்பாதுரை said...

beautiful!

நா.முத்துநிலவன் said...

சிவப்பு விளக்குக் கவிதை நெஞ்சைச் சுட்டது, எனில் குழந்தைகளுக்கான காக்கா கதை, நெஞ்சைத் தொட்டது. அருமையான கதை. உங்கள் தளத்திற்கு இவ்வளவு தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன். ஒவ்வொன்றாய்ப் படித்துவிட்டு அவ்வப்போது எழுதுவேன். தொடர்வோம் தோழரே.

Post a Comment