Thursday, November 3, 2011

மனசு

அடி மேல் அடி வைத்து
தடியை நிலத்தில் ஊன்றி,
ஒரு அடிக்கு 
ஒரு நிமிஷம் 
என்று நடந்து சென்றார்
ஒரு பெரியவர்...

மின்சார கட்டணம்
கட்ட கடைசி தேதி...

வேகமாய் நடந்து
அவரை கடந்தேன்...

கடந்த ஒரு நொடியில்
வேதனை பட்டிருப்பாரோ 
என்ற எண்ணம் 
மட்டும்... 

இன்னும் 
வரிசையில் நின்று 
கொண்டிருக்கிறது
என் மனசில்...

19 comments:

Unknown said...

என்ன கல் மனசு சார் உங்களுக்கு ?

வெளங்காதவன்™ said...

கவிதையெல்லாம் படிச்சா, வாந்தி வரும் சார்...
கதை போடுங்க.. அப்ப வாரேன்...

Anonymous said...

பிடித்தது...

இது இந்தியனுக்கே உரிய குணம்...மேலை நாட்டவர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டிய சிலதுகளில் இதுவும் ஒன்று தோழரே...

ஸ்ரீராம். said...

இதற்கு ஏன் வேதனை?

கோகுல் said...

சில கவிதைகள் சிறு வயதை நினைவூட்டும்
இந்த வரிகள் வரப்போகும் முதுமைக்காலத்தை
சிந்திக்க வைக்கிறது!

ராஜா MVS said...

கடந்து சென்ற பின்
கடந்தவை நம்மை
கடந்து செல்லும்...

கவிதை மிக அருமை... நண்பரே...

முனைவர் இரா.குணசீலன் said...

மனசு..

கேட்க மாட்டேங்குதே...

அருமை..

ம.தி.சுதா said...

இப்படி எத்தனை பேரது உணர்வுகள் வரிசையில் நிற்கிறதோ தெரியல சகோதரம்... (நான் உட்பட)

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வேலாயுதம், 7ம் அறிவு, ரா ஒண் முதல்வார வசூல் ஒப்பீடு (நாள் வாரியான)

கவி அழகன் said...

மனசை தொட்ட கவிதை

வலிப்போக்கன் said...

அப்படித்தான் எல்லோரும் இருக்கிறார்கள்

Unknown said...

அவசரம் என்று வரும்போது சுயநலம்தான் ஜெய்க்கிறது நண்பரே
அருமையான கவிதை

விச்சு said...

நமக்கு வயசாகும்போதுதான் தெரியும் - நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் நண்பா! உங்கள் விமர்சனங்கள்தான் எனக்கு உற்சாக டானிக். மிக்க நன்றி!

Thooral said...

இளமை தான் உண்மையான
எதிர் காலமான முதுமையை மறந்துவிடுகிறது
உண்மை ..

கவிதை அருமை

சீனுவாசன்.கு said...

இன்னா அவுசரம்?!...

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
இந்த உறுத்தல் இருக்கிற வரையில்
நாம் சரியாக இருக்கிறோம் எனத்தான் பொருள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Sharmmi Jeganmogan said...

மனமென்ற குரங்கு சொல் படி கேட்டால் ஏன் இந்த வேதனை. சென்னை வரும் நாட்களில் இந்த மாதிரியான பழக்கவழக்கங்களைக் கண்டு மனம் நொந்து கொள்வேன். பல பேர் வரிசையில் காத்திருக்க மிடுக்காக எல்லோரையும் இடித்துக் கொண்டு முன்னே போகின்றவர்களை என்னவென்று சொல்வது?
நேர்மையாக ஒப்புக் கொண்ட உங்கள் மனதிற்கு ஒரு சலாம்!

Avargal Unmaigal said...

உங்கள் மனசு வருத்தப்படும்படி நீங்கள் ஏதும் தவறு செய்யவில்லை என்பது என் கருத்து. நீங்கள் வரிசையில் இருந்த பெரியவரை ஒன்றும் முண்டி அடித்து அவரை பின் தள்ளீ நீங்கள் முன் செல்லவில்லையே? வேலைக்கு செல்லும் அவரசரத்தில் நீங்கள் மிக வேகமாக சென்று இருக்கலாம் ஆனால் அந்த முதியவரோக்கோ அன்று அந்த வேலை மட்டும்தான் செய்ய வேண்டி இருந்திருக்கும்.
உங்கள் நல்ல மனசு இருந்து நீங்கள் அந்த முதியவருக்கு உதவ நினைத்து அவரை அணுகி நான் உங்களுக்காக நான் க்யூவில் நின்று பணம் செலுத்துகிறேன் என்று நீங்கள் சொல்லி இருந்தாலும் அவர் மறுத்திருப்பார். காரணம் மற்றவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இந்த உலகம் மாறி இருப்பதனால்.


எதற்கு இந்த பெரிய விளக்கம் என்றால் உங்கள் கவிதையை படித்தவர்கள் நீங்கள் என்னவோ வரிசையில் நின்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு சென்ற மாதிரி புரிந்து கொண்டு பதில் அளித்துள்ளார்கள். அதை படித்த உங்கள் மனசு மீண்டும் வருத்ததில் சென்று விடக்கூடாது என்பதால்தான்

Avargal Unmaigal said...

நான் என்மனதில் உள்ளதை சொல்லிவிட்டேன் அதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்

SURYAJEEVA said...

வருகை புரிந்து கருத்து கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

Post a Comment