Tuesday, October 11, 2011

மெல்ல தமிழ் இனி...

பத்து ரூபாய்க்கு
பசியாற என்ன கிடைக்கும்?

கேள்விக்கு பதில்:
4 இட்லி அல்லது
3 போண்டா அல்லது
2 வடை அல்லது 
1 லிட்டர் தண்ணீர்...


கேள்வி கேட்டவன்
பஞ்சாலை தொழிலாளி;
பதிலளித்தவன்
உணவக முதலாளி!

விதைத்த வியர்வைக்கு
அறுவடை எப்பொழுது?

கேள்விக்கு பதில்
மௌனம்...

கேள்வி கேட்டவன்
விற்பனை பிரதிநிதி தொழிலாளி;
மௌனம் சாதித்தவன்
முதலாளி!


நீதியின் தராசு தட்டில்
எங்களுக்கு மட்டும் இடமில்லையா?

கேள்விக்கு பதில்
தேர்தல் வரட்டும்...

கேள்வி கேட்டவன்
சாலை துப்புரவு தொழிலாளி;
பதிலளித்தவன்
முதலாளி...

அய்யா,
நாங்கள்
வாழ என்ன வழி?


சூ
சத்தம் போடாதே;
நாங்கள்
தமிழ் வாழ
போராடி கொண்டிருக்கிறோம்...

கேள்வி கேட்டவன்
தமிழக தொழிலாளி;
பதில் அளித்தவன்
அரசியல் முதலாளி!

தமிழ் சாகரம்,
தமிழன் ஆறு....

ஆற்று நீர்
வற்றும் வரை
சாகரம் வற்றாது...
மெல்ல தமிழ் இனி
சாகாது...

குறிப்பு: இந்த கவிதை 2004  ஆம் வருடம் த.மு.எ.ச வின் கிளை மாநாட்டிற்காக எழுதப் பட்ட கவிதை... அப்பொழுது ஒரு பஞ்சாலை தொழிலாளியின் ஒரு நாள் சம்பளம் பத்து ரூபாய் என்று படித்து பின்பு வெறுப்பில் எழுதிய கவிதை...


26 comments:

குடந்தை அன்புமணி said...

உங்களின் மெயில் முகவரி தேவை...

C.P. செந்தில்குமார் said...

Super kavithai. Congrates

rajamelaiyur said...

வலிமிகுந்த கவிதை

Mohamed Faaique said...

வலிக்கிறது..

SURYAJEEVA said...

குடந்தை அன்புமணி - jeevansure@gmail.com
C.P.செந்தில் குமார் - thanks
"என் ராஜபாட்டை" ராஜா - thanks
Mohammed Faaique - sorry

Anonymous said...

சூர்யா உங்கள் புது வலைப்பூவுக்கு என் வாழ்த்துக்கள்...

ரத்தம் தோய்த்து எழுதுவதோடு இடை இடையே மயிலிறகால் வருடவும் செய்யவும்...

உங்கள் ஆணிவேரில் இதற்கு இணைப்பு கொடுங்கள்...வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

இன்றுதான் முதலில் இங்கு வருகிறேன்.மிக நல்ல சிந்தனை உள்ள கவிதை.

சம்பத்குமார் said...

//நீதியின் தராசு தட்டில்
எங்களுக்கு மட்டும் இடமில்லையா?

கேள்விக்கு பதில்
தேர்தல் வரட்டும்...

கேள்வி கேட்டவன்
சாலை துப்புரவு தொழிலாளி;
பதிலளித்தவன்
முதலாளி...//

உலுக்கி எடுக்கும் கேள்விகள்

அருமை நண்பரே..


நண்பரே இது புதிய வலைப்பூவா ? நானும் இன்றுதான் முதலில் வருகின்றேன்

சம்பத்குமார் said...

//தன் வீட்டு அடுப்பு எரிய
அவள் எரிந்தால்,
சிகப்பு விளக்காக...//

பக்கவாட்டில் குறுங்க(விதை) சூப்பர்

நன்றியுடன்
சம்பத்குமார்

கூடல் பாலா said...

கவிதை அருமை !

முனைவர் இரா.குணசீலன் said...

சிந்தனைக்குரிய கவிதை..
அருமை..

SURYAJEEVA said...

@ ரெவெரி - வியர்வை ரத்தத்தை எழுதுவதை விட வேறு எதுவும் வருடப் போவதில்லை புண்பட்ட நெஞ்சங்களுக்கு...

@ சென்னை பித்தன் - இது போட்டிக்காக தொடங்கப் பட்ட வலைபூ தோழர்... நடுவில் நின்று விட்டாலும் நின்று விடும்...

@ சம்பத் குமார் - ஆம் தோழரே, வம்சி சிறுகதை போட்டிக்காக தொடங்கப் பட்டது... குறுங்கவிதைகளை தனி பதிவை போட விரும்பவில்லை...

@ நண்டு நொரண்டு -ஈரோடு - நன்றி

@ koodal bala- நன்றி

SURYAJEEVA said...

நன்றி முனைவரே

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக் லே அவுட் நீட்.. கவிதை ஓக்கே

இராஜராஜேஸ்வரி said...

ஆற்று நீர்
வற்றும் வரை
சாகரம் வற்றாது...
மெல்ல தமிழ் இனி
சாகாது.../

கவிதை அருமை !

சத்ரியன் said...

//கேள்வி கேட்டவன்
தமிழக தொழிலாளி;
பதில் அளித்தவன்
அரசியல் முதலாளி!//

இப்ப மொதலாளி ஆயிட்டாங்களா? ரைட்டு.

சாட்டை.

SURYAJEEVA said...

@ C.P.செந்தில் குமார் - இதை தான் எதிர்பார்த்தேன்..

@ இராஜராஜேஸ்வரி - நன்றி

@ சத்ரியன் - எப்பவும் ஆள்பவர்கள் முதலாளிகள் தான்... முதலாளிகளின் கைப்புள்ளயும் முதலாளி தானே...

Unknown said...

உலுக்கும் கவிதை அருமை

Thooral said...

//விதைத்த வியர்வைக்கு
அறுவடை எப்பொழுது?//
எந்த ஜனநாயகத்திலும்
இந்த கேள்விக்கு மட்டும்
பதில் இல்லை :(

SURYAJEEVA said...

ஜ.ரா.ரமேஷ் பாபு - நன்றி தோழர்
jayaram thinagarapandian - நன்றி தோழர்

விச்சு said...

எங்கேயும் எப்போதும் படத்துல சொன்ன மாதிரி 10 ரூபாய் இப்போ சில்லறை காசாயிடுச்சு..அருமையான,மனதைத் தொடும் கவிதை...

Riyas said...

கவிதை முதலாளித்துவத்தை சாடுகிறது,, உழைக்கும் வர்க்கம் நிச்சயம் உயர்வு பெறனும்,,

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல கவிதை,அப்போவே இவ்வளவு நல்லா கவிதை எழுதி இருக்கீங்களே!

SURYAJEEVA said...

@ விச்சு - இப்பவும் அதே சம்பளம் தானான்னு தெரியல

@ Riyas - உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற ஒற்றுமை இன்றைய தேவை

@ நம்பிக்கை பாண்டியன் - எப்பவாவது அருமையா எழுதுவேன்...

vimalanperali said...

வணக்கம்.நல்ல கவிதை.வழங்கச் சொன்னால் வாக்குத்தரும் பிரதானிகள் நிறைந்த தேசமாகிப்போனது.பிரதானிகளின் எண்ணிக்கை அதிகமாகிப்போவதும் வலி தருவதாய் உள்ளது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை வலிக்கவும் செய்யுமா?

Post a Comment