மண்ணுக்கு உரமாகாதே;
மக்களுக்கு உரமாகு...
வாழ்வதற்காக சாகும் நீ;
செத்த பிறகும் வாழப் பார்...
பசி வறுத்தி எடுக்கும்,
பொருட்படுத்தாதே...
அந்த வயிற்று தீயை
நாவினில் கொண்டு வா...
வார்த்தைகளில் குழை,
காகிதத்தில் ஓட விடு...
தீமைகளை சாடி விடு...
தனிமனிதனாய்
தேவையில்லை;
அனைவரும் உன்னோடு,
தோழா,
தோளோடு! தோளோடு!!
38 comments:
தன்னமிக்கை வரிகள்...
கவிதை அருமை எழுத்தில் மட்டும் நிஜம் உங்கள் மனம் அறியும்
மண்ணுக்கு உரமாகாதே;மக்களுக்கு உரமாகு...
வாழ்வதற்காக சாகும் நீ;செத்த பிறகும் வாழப் பார்...
2 much...
முயற்சிக்கிறேன் நண்பரே..
அருமையான கவிதை நண்பரே..
நன்றியுடன்
சம்பத்குமார்
நல்ல ஆக்கப்பூர்வமான
எண்ணங்களை உதிக்கத்தூண்டும்
வார்த்தைகளை கோர்த்த கவிதை...
மிக அருமை... நண்பரே...
தன்னம்பிக்கை தரும் கவிதை அருமை
சின்னதும் கருத்துச் செறிவுமுள்ள கவிதை. பகிர்வுக்கு நன்றி
ஆரம்ப வரிகளே அடுத்த வரிகளை மறைக்கிறது!
சூர்யஜீவா,
அருமை அருமை!
அனைவருக்கும் இவ்வுணர்வு அவசியம் .....அருமை தோழர் !
நீங்கலெல்லாம் சாதாரண ஆளே கிடையாது. பதிவை யார் வேணும்னாலும் ஏதோ நாலு வரி எழுதிவிட்டு போய்விடலாம். ஆனால் கவிதை வேறு விஷயம். உங்களின் திறமைக்கு தலை வணங்குகிறேன்.
//
அந்த வயிற்று தீயை
நாவினில் கொண்டு வா...
வார்த்தைகளில் குழை,
காகிதத்தில் ஓட விடு...
தீமைகளை சாடி விடு..//
அருமையான வரிகள்
இன்று என் வலையில் ...
பாவம் நடிகர் விஜய்
தோள் தருவோம் தோழனே.......
எழுத்தோடு அறிவாக..
சொல்லோடு உணர்வாக...
தாங்கள் சொன்னவிதம் அருமை..
அந்த வயிற்று தீயை
நாவினில் கொண்டு வா...
வார்த்தைகளில் குழை,
காகிதத்தில் ஓட விடு...
தீமைகளை சாடி விடு.
இந்த வார்த்தைகளின் இடைவெளியில் சிக்கிக்கொண்ட என்மனது மீண்டுவர நீ்ண்ட நேரமானது.
சூரியஜீவா வார்த்தை களால்-நன்கு
சுட்டெரிக்கும் நல்ல
வீரியஜீவா கவிதை கூறியஜீவா-புயல்
வேகத்தை காட்டுமவர் ஜீவா
வாழ்க!
புலவர் சா இராமாநுசம்
கவிதை அருமை
@ கவிதை வீதி சௌந்தர்
@ ஜ.ரா.ரமேஷ் பாபு
@ ரெவெரி
@ சம்பத்குமார்
@ நண்டு @ நொரண்டு - ஈரோடு
@ ராஜா MVS
@ காட்டு பூச்சி
@ Mohammed Faique
@ கோகுல்
@ சத்ரியன்
@ koodal bala
@ ஆரூர் மூனா செந்திலு
@ என் ராஜபாட்டை ராஜா
@ முனைவர்
@ புலவர்
@ kobiraj
அனைவருக்கும் நன்றி...
இவை அனைத்தும் என்றோ எழுதியவை...
நான் எழுதியவற்றில் சிறந்தவை மட்டுமே இங்கு பகிரப் படுகிறது..
செத்த பிறகும் வாழப் பார்...//
இருக்கும் போதே சிலர் சாவடிக்கிறாங்க.. அவங்க செத்த பிறகும் வாழ்ந்தா
வணக்கம் நண்பா.
நலமா?
இன்று தான் இந்த கதை கவிதை ப்ளாக் பக்கம் வந்தேன்.
வாழ்க்கையில் தோளோடு தோள் கொடுத்து ஏற்றி விடத் துடிக்கும் மனிதனின் தன்னம்பிக்கை நிறைந்த வரிகளைத் தாங்கி நிற்கிறது கவிதை.
அருமையான கவிதை தோழர்
@ KANA VARO - இருக்கும் பொழுதே சாகடிப்பவர்கள் செத்த பிறகும் வாழ முடியாது..
@ நிரூபன் - நன்றி தலைவரே
@ mohan - நன்றி தோழர்
முதல்முறை இந்தப் பக்கம் வருகிறேன். அருமை.
அந்த வயிற்று தீயை
நாவினில் கொண்டு வா...
வார்த்தைகளில் குழை,
காகிதத்தில் ஓட விடு...
தீமைகளை சாடி விடு.
அதுவும்
தோளோடு தோளாய்...
அழகான புத்தெழுச்சி சிந்தனை சூர்யா.. வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
ஒரு கவிதை .... பாட்டுகள் தனி மனிதனுக்கு உணவு இல்லைஎனில் சகத்தை அழிப்போம் என்றான் கூலிக்காக பாடிய பாரதி அனால் பாவேந்தன் அண்டியன் பசியால் வாடஅங்கோடு மாடி வாழ்தல் மண்டையன் குற்றம் அன்று மண்ணிடை ஆட்சி குற்றம் என்பான் உங்களின் ஆக்கமும் பாராட்டுகளுக்கு உரியதாகிறது....
@ ஸ்ரீராம் - நன்றி அய்யா
@ ஆதிரா - நன்றி தோழி
@ கவி அழகன் - நன்றி அண்ணா
@ மாலதி - உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு தெரியாது, எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதியிருக்கிறேன்.. நன்றி தோழி
simply super
அருமை அருமை ...
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
புத்துணர்வூட்டும் கவிதை.
வாழ்த்துக்கள்.
பொது நலனுக்காக சிந்திக்கும் மூளையும், செயல்படும் கைகளும் வணக்கத்திற்குரியவை. வணக்கம் தோழர்.
வம்சியின் சிறுகதை அறிவிப்பை உங்களால் தான் தெரிந்து கொண்டேன். Widget இணைத்ததற்கு நன்றி.
அடுத்த கவிதை எப்போது? அடிக்கடி வந்து பார்த்து ஏமாற்றத்துடன்..
தனி மனிதனை நல்ல சமூக மனிதனாக
ஆற்றுப்படுத்தும் அழகிய கவிதை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
அம்பலத்தார்
jayaram thinagarapandian
விமலன்
சிவகுமாரன்
ரசிகன்
Ramani
அனைவருக்கும் நன்றி
அனைவருக்கும் ஆதிராவுக்கும் கூறிக் கொள்வது, என் சிந்தனைகள் முழுவதும் அரசியல் பிரச்சினைகளே ஆக்கிரமித்திருப்பதால் சொல் விளையாட்டு தடை படுகிறது... அது வரை எனக்கு சிறந்ததாக படும் என் பழைய படைப்புகளை இங்கு கோர்த்துக் கொண்டிருக்கிறேன்...
அன்பு சூர்யா,
அங்கும் இங்கும் என் வினாவுக்கு மறுமொழி கூறிய தங்கள் பொறுப்பை எண்ணி வியக்கிறேன். த்ங்கள் மறுமொழியை இன்றுதான் கண்டேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தங்கள் மனம் அரசியலை விட்டு வரும்போது எழும் அழகான கவிதைகளுக்காகக் காத்திருக்கிறோம். அதுவரை தங்கள் கவிதைச்சுரங்கத்தில் புதைந்த பழைய கவிதைகளை ரசிக்கிறோம். நன்றி
varigalukkum thangalukkum vazhthukkal..
பசித்தீயை பாவின் வேள்வித்தீயாய் மாற்றி சமூகத்தின் தீமை சாடும் கேள்வித்தீயாய் உருவாக்கச் சொல்லும் அற்புதக் கவிதை. பாராட்டுகள்.
Post a Comment