Thursday, October 20, 2011

கவிதைகள்

பேனா முட்கள்
கீறும் காயங்களால்
புடைத்து எழும்
எழுத்துக்கள்...

கண்ணீர் மை
வார்த்தைகளை நனைத்து
காகிதத்தை கனமாக்குகிறது...

சுய வலிகள்
சுமக்கும்
காதல் காகிதங்கள்
வரலாற்று பக்கங்களில்
அரசரின் வாழ்வாய்...

சமுதாய அழுக்கை
சாடி
பழுப்பேறி நிற்கும்
காகிதங்கள்
கலங்கரை விளக்காய...

5 comments:

கோகுல் said...

பேனா முள்ளின் வலிமை
வியக்கத்தக்கது!

அதனால் உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்குகளை காணும் போது
தோன்றுகிறது!

Mohamed Faaique said...

///பேனா முட்கள்
கீறும் காயங்களால்
புடைத்து எழும்
எழுத்துக்கள்...
///

காதலியின் பெயரை பேனாவால் எழுதினால் அவள் பெயருக்கு வலிக்குமோ!!!!

கவிதை அழகாகவும் அர்த்தம் செறிட்ந்த்தாகவும் இருக்கு.. நன்றி

Anonymous said...

ரோஜாக்களும் அவையே...புரட்சி பிரசவிக்கும் சிறு பொறிகளும் அவையே...

Thooral said...

//கண்ணீர் மை
வார்த்தைகளை நனைத்து
காகிதத்தை கனமாக்குகிறது//

அருமை அருமை

SURYAJEEVA said...

@ கோகுல் @
@ Mohammed Faaique @
@ ரெவெரி @
@ jayaram thinagarapandian @

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழர்களே

Post a Comment