Wednesday, October 19, 2011

முட்கள் இல்லாத வெள்ளை ரோஜாக்கள்...

சிகப்பு அணுக்களின் 
விரோதம் பெற்ற 
வெள்ளை அணுக்கள்...

சமுதாய இமைகளின் நடுவே
சிக்கி தவிக்கும்
விழி படலங்கள்...

அனைவரும் காலடி மட்டுமே 
பதிக்கத் துடிக்கும்
பௌர்ணமி நிலாக்கள்...

புயல் காற்று
துரத்திச் செல்லும்
வெண்மேகங்கள்...

பிற்போக்கு
பேச்சாளர்களின் வாய்க்கு 
அவல், பொரிகள்,
அவர்கள்...

இவர்கள்
சிறகுகள் வெட்டப் பட்ட
சமாதான புறாக்கள்...

என்றும்
தேனீக்களுக்கு அஞ்சி வாழும்
முட்கள் இல்லாத
வெள்ளை ரோஜாக்கள்...

பிற்சேர்க்கை: பல தோழர்கள்  புரியவில்லை என்று கூறி உள்ளார்கள்... சாமானிய மக்களுக்காக எழுத வேண்டும் என்பதே என் எண்ணம்.. படிப்பவர்களுக்கு புரிய வில்லை என்றால் படைப்பு இறந்து விட்டதாகவே எண்ணம்...
இந்த கவிதை இளம் விதவைகள் குறித்து எழுதியது...
இந்த தோல்வியை படிகட்டாய் மாற்றி இனி வரும் கவிதைகள் புரியும் படியாகவே இருக்கும் என்று கூறிக் கொள்கிறேன்

11 comments:

Unknown said...

புயல் காற்று
துரத்திச் செல்லும்
வெண்மேகங்கள்...

கொஞ்சம் புரில விளக்குங்க நண்பரே

ஆமினா said...

சிறகு வெட்டப்பட்டவர்களின் நிலையை அழகாய் சொல்லியுள்ளீர்கள்

Anonymous said...

இப்போதைக்கு புரியலை...விளக்க வேண்டாம்...நானே புரிஞ்சுக்கிறேன் நண்பரே...

Anonymous said...

கவிதை கவிக்கு மட்டுமே சொந்தம்...புரிதலும் அப்படித்தான்...கவிதைகளுக்கு மட்டும்....
விளக்கம் கவிதையை கொன்றுவிடும்...

ராஜா MVS said...

புத்தியில் முதிற்ச்சி, சிந்தனையில் தேர்ச்சி பெற்ற கவி...

வாழ்த்துகள்... நண்பா...

Mohamed Faaique said...

கவிதை நல்லாயிருக்கு,.. ஆனால், யாரை குறித்து எழுதினது’னு புரியல...

Unknown said...

என்றும்
தேனீக்களுக்கு அஞ்சி வாழும்
முட்கள் இல்லாத
வெள்ளை ரோஜாக்கள்...

அருமையான கவிதை வரிகள். பகிர்வுக்கு நன்றி.

SURYAJEEVA said...

ராக்கெட் ராஜா
ஆமினா
ரெவெரி
ராஜா MVS
Mohammed Faaique
க.அசோக் குமார்
அனைவருக்கும் நன்றி...
புரியவில்லை என்று உண்மை சொன்னவர்களுக்கு பிற்சேர்க்கை சேர்த்திருக்கிறேன்...
உண்மையை சொல்லியவர்களுக்கு முழு நன்றி

கவி அழகன் said...

கவிதை வரிகள் அருமை கொஞ்சம் விளங்க முடியல

அடிமட்ட வாசகர்களுக்கு ஆனந்தம் தரும் கவிதைகளை எதிர்பார்க்கிறோம்

SURYAJEEVA said...

ஆம் கவி அழகன், இந்த கவிதை இறந்து விட்டது...

சீனுவாசன்.கு said...

தலைப்பை இளம்விதவைகள் என்று எழுதி இருக்கலாம்!

Post a Comment