Sunday, October 9, 2011

விடியும் தருணம்

மழையில் நனைந்த
கோழி போல் 
சுருங்கி விட்டது
உலகம்...

துடிக்க மறந்து
விட்ட நிலையில்
இரும்பு துண்டமாய் 
இதயம்...

புதிய பொருளாதார 
கொள்கையுடன் 
உலக வங்கியின்
பயணம்...

கண்ணீர் சிந்தும்
கூட்டத்திடம்
குருதி உறிஞ்சும் 
அவலம்...

நமக்கென்ன என்று
இருந்தால்,
வாழ்வதிங்கு
சிரமம்...

நம் அனைவர்
கைகளும்
இணைந்து விட்டால்
விடியல் என்பது
சுலபம்...

4 comments:

vetha (kovaikkavi) said...

''..நம் அனைவர்
கைகளும்
இணைந்து விட்டால்
விடியல் என்பது
சுலபம்...''..
இங்கு தானே இடிக்கிறது. இதில் தானே எல்லா பிரச்சனையும் அடங்கியுள்ளது. இந்த ஒற்றுமை...ஒற்றுமை..பிரிவினை.. பிரிவனை...ஆண்டவன் அருளட்டும்.பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

SURYAJEEVA said...

நம்பிக்கை தாங்க வாழ்க்கை.. எனக்கு நம்பிக்கை இருக்கு... அது குருட்டு நம்பிக்கை என்று கூறினாலும் பரவாயில்லை தோழி

நம்பிக்கைபாண்டியன் said...

மழையில் நனைந்த
கோழி போல்
சுருங்கி விட்டது
உலகம்...

நல்ல உவமை :) :) :)

SURYAJEEVA said...

திடீர்னு தோனுச்சு எழுதிட்டேன், நிறைய பேருக்கு தோணியிருக்கும் இல்லன்னு சொல்ல முடியாது

Post a Comment