Friday, November 18, 2011

புதுப் புரட்சி

நான் தமிழன்,
நீ தெலுங்கன்...

நான் இந்தியன்,
நீ பாகிஸ்தானி...

நான் பிராமணன்,
நீ சூத்திரன்...

நான் வலதுசாரி,
நீ இடது சாரி...

நான் ஆத்திகன்,
நீ நாத்திகன்...

நான் சீக்கியன்,
நீ கிருத்துவன்...

கடக்கும் திசை எங்கும்,
கண்ணுக்கு புலப்படாமல் சுவர்கள்..

நாம் கஷ்டப் படுபவர்கள்...
நாம் சுரண்டப் படுபவர்கள்...
என்ற ஒற்றுமை மட்டும் உறக்கத்தில்...

கண்கள் உறக்கத்தை கலைத்ததும்,
காற்றில் கரைந்து விடுகிறது சுவர்கள்...

யுகப் புரட்சி பார்த்தாயிற்று,
இந்த புதுப் புரட்சி?

20 comments:

Anonymous said...

புரட்சிக்கவி on a roll...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

விடியல் வரும் தோழா.

Mohamed Faaique said...

கடக்கும் திசைகளில் சுவர்கள் இருந்தாலும் கடந்து விடலாம். ஒவ்வொருவர் மனதிலும் சுவர்கள் சிறுவயதிலேயே இடப்பட்டிருக்கிறது (உங்கள் சிறுவர் கதை போல) அதைக் கடப்பதுதான் கஷ்டம்

jayaram thinagarapandian said...

கவிதை புரட்சி ...
கவிதை அருமை ..

மாலதி said...

மிகவும் சரியான கோணத்தில் சிந்தித்து இருக்கின்றீர்கள் இதற்கான காரணம் வெள்ளைக்காரன் தான் என்பதை நாம் உணரவேண்டும் காரணம் நமது ஒற்றுமையை அவன் சீர்குலைக்க எடுத்துக் கொண்ட பெரு முயற்சிஅதாவது பிரித்தலும் கொள்கை . நல்ல ஆக்கம் பாராட்டுகள் .

♔ம.தி.சுதா♔ said...

////கண்கள் உறக்கத்தை கலைத்ததும்,
காற்றில் கரைந்து விடுகிறது சுவர்கள்.////

இதுவே என்றும் நியம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

♔ம.தி.சுதா♔ said...

சகோ மன்னிக்கணும் வாக்களிக்க முனைந்து பதிவை யுடான்சில் இணைத்து விட்டேன்...

Priya said...

நல்லதொரு கவிதை.....வாழ்த்துக்கள்!!!

ROBINSON said...

அருமை.... வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

இது தேவை அற்ற ஒரு புரட்சி.இந்தநிலை மாற வேண்டும் .சிறப்பான ஆக்கம் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

ஸ்ரீராம். said...

//"இந்தப் புதுப் புரட்சி..?"//

விரைவில் வரும்!

Ramani said...

எளிமையான வார்த்தைகளில்
கனமான விஷயத்தைத் தாங்கிய அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

வரிகளின் அழுத்தம் மன ஆழத்தை அழுத்தமாக சொல்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துகள்

பரமசிவம் said...

//கடக்கும் திசையெங்கும்
கண்ணுக்குப் புலப்படாமல் சுவர்கள்//

கருத்துச் செறிவுள்ள கவித்துவம் மிக்க
நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்ட வரிகள்!

-இது என் மனப்பூர்வ பாராட்டு ஜீவா.

கணேஷ் said...

அழகான, பொருட் செறிவுள்ள கவிதை. புரட்சிப் பூ விரைவில் பூக்கும். இதயம் நிறைந்த பாராட்டுக்கள் நண்பா...

ஊரான் said...

சிறப்பு!
வாழ்த்துகள்!

Lakshmi said...

யுகப் புரட்சி பார்த்தாயிற்று,
இந்த புதுப் புரட்சி?


கவிதை நல்லா இருக்கு.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

பிரிட்டிஷ்காரன் சூழ்ந்திருந்தபோதே...(சிப்பாய்) கலகம்(?) மட்டுமே செய்தவர்கள் நம்மவர்கள்.

புரட்சி என்ற வார்த்தை நமது வரலாற்றியிலேயே இல்லை. நீங்கள் அக்னி குஞ்சாய் பற்றவைக்கும் நெருப்பு பற்றி எரியட்டும்.

காலம் சற்றே புரண்டு படுக்க நாம் நமது கடமையை செய்வோம்.

கவிதை நன்று!. வாழ்த்துகள்.

அ. வேல்முருகன் said...

மனிதம் மறந்து
மக்கள் பிரியலாம்

கவியோ
மற்றவையல்ல..
மானுடம் நீயென்று
சேர்க்கலாம்


அரிய அப்பணியை
அருமையாய் செய்தீர்

G.M Balasubramaniam said...

பிறப்பொக்கும் என்று வாய் கிழிய பேசும் நாம் அதை நடைமுறையில் செயல்படுத்த நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. ஆண்டை அடிமை என்னும் எண்ணம் நம் சிந்தனையில் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று . அதை செயல்படுத்தவென்றே ஏற்படுத்தப்பட்ட சுவர்கள் மனசிலிருந்து அகற்றப் படவேண்டும். என் பல பதிவுகளில் நான் கொட்டித் தீர்க்கும் ஆதங்கங்களை இதிலும் உணர்கிறேன். மனப் புரட்சி தேவை.

Post a Comment