Wednesday, February 8, 2012

மின்வெட்டு

கருத்த வானத்தில்
கண் சிமிட்டும் விண்மீன்கள்..
சுய வெளிச்சத்தில்
சுற்றி திரியும் மின் மினிகள்....

புத்தகத்தில் 
கவனம் செல்லாமல்...

காத்திருக்கிறேன்..

எட்டு மணிக்கு வரும்
மின்வெட்டுக்கு...

23 comments:

rajamelaiyur said...

எங்க ஊருல 10 மணிநேரம் power cut

RAMA RAVI (RAMVI) said...

//எட்டு மணிக்கு வரும்
மின்வெட்டுக்கு...//
அழகான வரிகள்.

கவிதை சிறப்பாக இருக்கு,ஆனால் கருத்துதான் வருந்தத்தக்கதாக இருக்கு.

Anonymous said...

மோடியிடம் வாங்காமல் இருக்க ஜெ யை எது தடுக்கிறது தோழர்...?

Prem S said...

கவிதை அழகு அன்பரே திருச்சியில் 8 மணி நேரம் அன்பரே!கடந்த ஆட்சியில் 5 மணி நேர அறிவித்த தொடர் மின்வெட்டுக்கு குய்யோ முய்யோ என புலம்பியவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என தெரிய வில்லை

கீதமஞ்சரி said...

நட்டத்திலும் லாபம் எதிர்பார்க்கும் வித்தியாச சிந்தனைக்குப் பாராட்டுகள்.

vimalanperali said...

யதார்தமே கவிதையாக /நன்றாயிருக்கிறது தோழர்.வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

எங்கள் பகுதியில் அவ்வளவு மின்வேட்டு இல்லை என்று பின்னூட்டமிட்டு அது ஏற்கப் படாமல் இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் மூலம் வந்து எழுத உட்கார்ந்தால் ஒரேயடியாக மூன்று மணிநேரம் பவர் கட். ஒரு நிம்மதி. கருத்து வெளியிட முடிகிறதே. கொஞ்ச நாட்களாய் பதிவுப் பக்கமே காணோமே.

vimalanperali said...

வனக்கம் தோழர்,திரு அட்சயா அவர்களால் எனக்கு அளிக்கப்பட்ட versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.தாங்களும் ஐவருக்கு பரிந்துரைக்கவும்.

'பசி'பரமசிவம் said...

நண்பரே,
‘கருத்த வானத்தில்.....’என்று தொடங்கும் தங்கள் கவிதையை ஒரு முறைதான் படித்தேன். திரும்பத் திரும்ப என் மனத்திரையில் அது ஓடிக்கொண்டே இருக்கிறது!
அத்தனை கனமான கவிதை!
இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

அ. வேல்முருகன் said...

மணி சொல்லியா வருகிறது
மனம் போல் வருகிறது

மாலதி said...

எட்டு மணிக்கு வரும்
மின்வெட்டுக்கு... //திட்டமிட்டு தமிழகத்தைபுரக்கநிக்கிறது நடுவணரசு தமிழக அரசோ நிலை தடுமாறி நிற்கிறது மின்சார விசயத்தில் அதற்குதான் தமிழக அரசும் தானே மின் உபத்தி தொடங்க போகிறதாம் பார்ப்போம் நாடகத்தை .... ஆக்கம் அருமை பாராட்டுகள்...

ஹேமா said...

இன்றைய நிலைமையை சின்னதாய் அருமையாய் வேதனையோடு சொல்லியிருக்கிறீர்கள் சூர்யஜீவா.பாராட்டுக்கள் !

ananthu said...

ஆட்சி மாறினாலும் , காட்சி மாறவில்லை , காத்திருப்போம் வெளிச்சத்துக்கு ...

ராஜி said...

என்று விடியும் நமக்கு?

Thooral said...

அருமை தோழர் ..
என்று தணியும் எங்கள் மின்சார தாகம்

Different தமிழ் said...

உண்மையான வரிகள்
கவிதைக்கு பொய் அல்ல மெய்தான் அழகு
என்பதை இந்த வரிகள் உணர்த்தும்

http://differenttamil.blogspot.in

Yaathoramani.blogspot.com said...

எட்டு மணி கரண்ட் கட்டுக்கு
இப்போதே வியர்த்திருக்கிறேன்
எனக் கூடச் சொல்லலாமோ
யதார்த்தம் சொல்லிப் போகும் அருமையான பதிவு

சிவகுமாரன் said...

இருட்டைப் பற்றிய
கவிதை.
வெளிச்சமாய்.
நச்சென்று.

ANBUTHIL said...

இப்பொஎல்லம் காலைல 6 மணிக்கே கரண்ட் கட் தலைவா

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

தங்களின் இந்தப் பதிவு [கவிதை] மிகவும் அருமையாக உள்ளது.

வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

அன்புடன்
vgk

இராஜராஜேஸ்வரி said...

வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

Aathira mullai said...

இருட்டில் வாழப் பழகிக்கொண்டார்கள் தமிழக மக்கள். கவிதை அருமை.

Ashwani Singh said...

Valuable Inforamtion I Like it and Visit Who has interested Make Money Online from Home

Post a Comment