Friday, October 21, 2011

பொதுஉடமை vs CAPITALISM

வளைந்து நின்ற
கேள்விக்குறிகளை,
அடித்து நிமிர்த்தி
ஆச்சரியக் குறியாக்கி...

புரட்சி
விளைவித்த
மக்கள் ஜனநாயகம்...
தவறான கைகளில்
சிக்கி
சிதறுண்டு
மக்கள் வாழ்வை
மீண்டும் கேள்விக் குறியாக்கியது...

சோவியத் சிதறியதால்
பொது உடமை தோற்றது,
என்ற நையாண்டி
இன்று தலை குனிந்து
மௌனமாய் நிற்கிறது...

அமெரிக்கா பொருளாதாரம்
தரம் தாழ்ந்து
தனி உடமை தோற்று போய்...

அமெரிக்க மண்ணில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தை ஆதரித்து...

22 comments:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

விரிவாகப் பேச வேண்டிய பொருள். விரைவில் வருகிறேன்!

Unknown said...

பாலாய்ப் போனப் பொதுவுடைமை
பாழாய்ப் போனதென் பதெல்லாம்
மனத்துள் புகுந்த மாயையே..

பொதுவுடைமைத் தத்துவமே
இந்த மனித குலத்தின் ஆணிவேர்...
மற்றவைகள் எல்லாம் வெறும்
கிளைகளும்
இலைக் காய் கனிகளும் தான்..

இன்னும் சரியாகச் சொன்னால்..
ஜனநாயகம் என்னும் படகு
இரண்டையும் கரையாக்கி
சரியாக பயணித்தால்
ஒருபோதும் கரைத் தட்டாது...

சோவியத் என்னும்
தேன்கூட்டை களைத்தப் பெருமை
ஆலோலம் (அல்லலோலம்) போடும்
அமெரிக்காவையே சாரும்....

பெரும்பாலும் ஊர் பஞ்சாயத்துப்
பன்னுபவனின் வீடுதான் உருப்புடாமல்
இருக்கும் என்பதே நாம் கண்ட அனுபவம்.

காரணம் அவன் எங்கே வீட்டைக் கவனிக்க?..

சிந்தனையும் சீரிய கவிதையும் அருமை நண்பரே

சம்பத்குமார் said...

அருமை நண்பரே..

நன்றியுடன்
சம்பத்குமார்

சிவகுமாரன் said...

இன்னும் எத்தனை காலத்திற்கு சோவியத் என்னும் வறட்டு சித்தாந்தம்?
.

Anonymous said...

வால் ஸ்ட்ரீட் முற்றுகை ...எண்ணம் நல்லது...ஆட்டிவைப்போர் சாதாரணர் அல்ல (ஆளுங்கட்சியின் பினாமிகள்) என்பதே என் கவலை தோழர்...

BTW,கவிதை அருமை...

rajamelaiyur said...

//
புரட்சி
விளைவித்த
மக்கள் ஜனநாயகம்...
தவறான கைகளில்
சிக்கி
சிதறுண்டு
மக்கள் வாழ்வை
மீண்டும் கேள்விக் குறியாக்கியது...

//

நியாயமான வரிகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

ஸ்ரீராம். said...

எனக்குப் புரியாத விஷயம்...!

ராஜா MVS said...

அருமை...

Aathira mullai said...

ஜனநாயகப் புரட்சியால் மக்கள் வாழ்வு மீண்டும் கேள்விக்குறியாக ஆனது.. உண்மையைக் கூறியுள்ளீர்கள். பொது உடைமை தோற்றுத்தான் போயுள்ளது. அமெரிக்கனின் தனியுடைமைத் தத்துவமே தலைதூக்கியுள்ளது.அத்தனை சிந்தனையும் முத்தான சிந்தனைகள்.

Riyas said...

புரியவில்லை..

Aathira mullai said...

அன்பு சூர்யா,
அங்கும் இங்கும் என் வினாவுக்கு மறுமொழி கூறிய தங்கள் பொறுப்பை எண்ணி வியக்கிறேன். த்ங்கள் மறுமொழியை இன்றுதான் கண்டேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தங்கள் மனம் அரசியலை விட்டு வரும்போது எழும் அழகான கவிதைகளுக்காகக் காத்திருக்கிறோம். அதுவரை தங்கள் கவிதைச்சுரங்கத்தில் புதைந்த பழைய கவிதைகளை ரசிக்கிறோம். நன்றி

மாலதி said...

நீங்கள் குறிப்பிடும் பொதுமையும் இன்று பிழையாகிப் போனதோ இங்கு பொதுமை ஊர் ஊருக்கு வேறுமாதிரி கோட்பாடுகளை கொண்டு இருக்கிறார்கள் உங்களின் சிறந்த இடுகைக்கு பாரட்டுகள் முந்தைய ஆக்கமும் சிறப்பே பாரட்டுகள் .

அம்பாளடியாள் said...

அருமையான புரட்சிக் கவிதை சகோ .வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு ........

Unknown said...

வளைந்து நின்ற
கேள்விக்குறிகளை,
அடித்து நிமிர்த்தி
ஆச்சரியக் குறியாக்கி...


simply superb

Yaathoramani.blogspot.com said...

கவிதையின் கரு குறித்து எனக்கு
மாற்றுக் கருத்துண்டு ஆயினும் தங்கள் கவிதை அருமை
சொல்ல நினைப்பதை மிக அழகாக சொல்லிப் போகிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்

விச்சு said...

விவாதத்துக்கு உரியது..நல்லதொரு கவிதை. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே!!

Anonymous said...

எனக்கு இதில் மாற்றுக் கருத்து உண்டு.
கவிதையை ரசித்து படித்தேன். வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

மறுமொழி கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

Thooral said...

//வளைந்து நின்ற
கேள்விக்குறிகளை,
அடித்து நிமிர்த்தி
ஆச்சரியக் குறியாக்கி...

புரட்சி
விளைவித்த
மக்கள் ஜனநாயகம்...
தவறான கைகளில்
சிக்கி
சிதறுண்டு
மக்கள் வாழ்வை
மீண்டும் கேள்விக் குறியாக்கியது//

அருமை வரிகள் :)
புரட்சியின் தேவை சொல்லும் கவிதை

எனது பக்கங்கள் said...

முதலாளித்துவம் அதன் கோர முச்சந்தியில் இருந்து கூக்குரலிடுகிறது.அதன் உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. அதன் பேய் முகம் அம்பலப்பட்டு போய் வால் ஸ்ட்ரீட்டில் நிற்கிறது தொழிலாளி வர்க்கம். ஆயிரங்கால் பூதம் அமெரிக்காவையும் விழுங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை கவிதை படைத்த கவிஞருக்கு நன்றி !

அ. வேல்முருகன் said...

100 நாடுகளை கடந்து இந்த புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அணைய விடாமல், சரியான தலைமையும் கிடைத்தால் நிச்சயம் 99 % ஒரு சதவீதம் வெல்லும்

Post a Comment